கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்ட்டதில் இதுவரை 11 லட்சத்து 22 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட்டதில் இதுவரை 11 லட்சத்து 22 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
11 லட்சம் பேருக்கு
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 11 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தடுப்பூசி
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை மாவட்டத்தில் 11 லட்சத்து 22 ஆயிரத்து 976 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 9 லட்சத்து 47 ஆயிரத்து 830 பேரும், 1 லட்சத்து 75 ஆயிரத்து 146 பேரும் செலுத்தியுள்ளனர்.
இதுபோல் ஆண்கள் 5 லட்சத்து 80 ஆயிரத்து 181 பேரும், பெண்கள் 5 லட்சத்து 42 ஆயிரத்து 603 பேர். கோவிஷீல்டு 9 லட்சத்து 95 ஆயிரத்து 121, கோவேக்சின் 1 லட்சத்து 25 ஆயிரத்து 836. மேலும், 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 183, 45 வயது முதல் 60 வயது வரையுடையவர்கள் 3 லட்சத்து 23 ஆயிரத்து 305, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 488 பேர் அடங்குவர். தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.