வகுப்பறைகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்

திருப்பூர் மாவடடத்தில் பள்ளிகள் 1ந் தேதி திறக்கப்பட உள்ளதால் வகுப்பறை சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-08-27 13:12 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவடடத்தில் பள்ளிகள் 1ந் தேதி திறக்கப்பட உள்ளதால் வகுப்பறை சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 
பள்ளிகள் திறக்க அனுமதி 
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைந்த போது ஊரடங்கு தளர்வுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக 2 ஆண்டுகளாக இருந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு விட்டன. 
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. வருகிற 1ந் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
ஏற்பாடுகள் தீவிரம் 
மேலும், ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. மாணவர்களை அமரவைப்பதில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால் மீதம் இருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும். ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கட்டாயம் ஆசிரியர்கள், மாணவர்கள் முககவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 
இந்நிலையில் இன்னும் சில நாட்களே பள்ளி திறப்பிற்கு உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகளில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
 காணலாம்.
-----



மேலும் செய்திகள்