கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம்
கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம்
நாகர்கோவில்:
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சுதர்சனா. இவர் தெரு நாய்களை பாதுகாக்க கோரி கர்நாடகா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரது சைக்கிள் பயணம் குறித்து கேட்டபோது கூறியதாவது:-
தெரு நாய்களை பாதுகாக்க கோரி இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். தெரு நாய்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தெரு நாய்கள் விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அவசர காலங்களில் நாய்களுக்கு சிகிச்சையளிக்க முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்க வேண்டும், என்றார். இதைத் தொடர்ந்து அவர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். தெரு நாய்கள் மீது அக்கறை கொண்டு சுதர்சனா சைக்கிள் பயணம் மேற்கொண்டதை பொதுமக்கள் பாராட்டினர்.