ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 மூதாட்டிகள் பலி; புதிதாக 115 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 மூதாட்டிகள் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-08-26 21:25 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 மூதாட்டிகள் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
115 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 728 பேருக்கு பரிசோதனை செய்ததில், 130 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 97 ஆயிரத்து 797 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 146 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரத்து 594 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 1,616 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
3 மூதாட்டிகள் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 30-ந்தேதி இறந்தார். இதேபோல் கொரோனாவுக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது மூதாட்டி கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி இறந்தார்.
மேலும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த, 73 வயது மூதாட்டி கடந்த 23-ந்தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்