போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றவர் கைது

உவரியில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-26 20:29 GMT
திசையன்விளை:
உவரி சார்லஸ் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் சிங் (வயது 50). இவர் மீது உவரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேறு பெயரில் போலியாக பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் உவரிக்கு வந்த அவரை உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று கைது செய்தார்.


மேலும் செய்திகள்