புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,063 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 587 பேர் உள்ளனர். 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 72,478 ஆகும். கொரோனாவுக்கு நேற்று 75 வயது முதியவர் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,004 ஆக உயர்ந்தது.