காரில் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

நெல்லையில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-26 20:11 GMT
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 16 மூட்டைகளில் மொத்தம் 640 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பனவடலிசத்திரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 24), பொட்டலை சேர்ந்த டிரைவர் வேல்முருகன் (20) என்பதும், அவர்கள் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்