மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

முசிறி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தது

Update: 2021-08-26 20:10 GMT
முசிறி
முசிறி அருகே சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். அவர்களில் சிறுமி திரிஷா (வயது 8) தோட்டத்திற்கு குளிக்க சென்றபோது அங்கிருந்த மின்மோட்டார் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே திரிஷா உயிரிழந்தாள். இதுகுறித்து தகவலறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்