மது-புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

மது-புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-08-26 20:05 GMT
கொள்ளிடம் டோல்கேட்
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நெ.1 டோல்கேட் கடைவீதி  மற்றும் தாளக்குடி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற ரவிச்சந்திரன் (வயது 56) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள டீ கடைகளில் சோதனை மேற்கொண்டபோது புகையிலை பொருட்கள் விற்றதாக சதீஷ்குமார் (36), மணிகண்டன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்