வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-26 19:41 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படநிலை கிராமத்தை சேர்ந்த பாண்டித்துரையின் மகன் தினேஷ்(வயது 22). இவர் தனது தாயுடன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் புரட்சிமணி (வயது 30). இவர் தினேசின் இடத்தில் வீடு கட்டியதாக தெரிகிறது. இதையறிந்த தினேஷ் படநிலை கிராமத்திற்கு வந்து, என்னுடைய இடத்தில் எப்படி வீடு கட்டலாம் என்று கேட்டுள்ளார். அப்போது புரட்சிமணி, தினேசை திட்டி அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், புரட்சிமணியின் உறவினர்கள் கவியரசு(31), செல்வம்(28) ஆகியோர் அருகில் இருந்த கட்டையால் தினேசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தினேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தினேஷ் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து புரட்சிமணி, கவியரசு மற்றும் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்