திருப்பூர்,
பொதுத்துறை பங்குகள் மற்றும் நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு விற்பதை கண்டித்து, சி.ஐ.டி.யு. மாவட்ட குழு சார்பில் நேற்று குமரன் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. பனியன் சங்க செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் உன்னி கிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு நடவடிக்கைகளை கண்டித்து கோஷமிட்டனர்.