வாணியம்பாடி அருகே லாரி அதிபரை திசைதிருப்பி ரூ.1½ லட்சம் கொள்ளை
வாணியம்பாடி அருகே லாரி அதிபரை திசைதிருப்பி மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே லாரி அதிபரை திசைதிருப்பி மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பணம் ரோட்டில் விழுந்ததாக...
வாணியம்பாடியை அடுத்த புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). லாரி உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் மாலை வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.1½ எடுத்து தனது மோட்டார்சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு திருப்பத்தூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் குணசேரனை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சின்னவேப்பம்பட்டு அருகில் சென்றபோது மர்ம நபர்கள், குணசேகரனிடம் பணம் கீழே விழுந்துள்ளதாக கூறி உள்ளனர். இதை நம்பிய குணசேகரன் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, கீழே கீழே சிதறிகிடந்த பணத்தை எடுத்தார்.
ரூ.1½ லட்சம் கொள்ளை
இந்த நேரத்தில் மர்ம நபர்கள், குணசேகரனின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1½ லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் குணசேகரன் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பணத்துடன் தலைமறைவான மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.