அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு
அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு
திருப்பூர்,
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக இந்த தேர்வுகள் திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளி மற்றும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தேர்வுகள் எவ்வாறு நடைபெறுகிறது?, அரசு ஊழியர்கள் சரியான முறையில் தேர்வு எழுதுகிறார்களா? என்பது குறித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ராஜ்மரிய சூசை நேற்று தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.