திருப்பூரில் வணிக வளாகம் ஒன்றில் உள்ள அழகு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் வணிக வளாகம் ஒன்றில் உள்ள அழகு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-26 18:24 GMT
திருப்பூர்
திருப்பூரில் வணிக வளாகம் ஒன்றில் உள்ள அழகு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
வணிக வளாகம் 
திருப்பூர் வாலிபாளையம் மெயின்ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கிங்ஸ்பெரி சிட்டி சென்டர் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகம், பல்பொருள் அங்காடி, உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையம்  போன்றவை இயங்கி வருகின்றன. 
இந்த நிலையில் நேற்று காலையில் இந்த வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் உள்ளே இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
தீ விபத்து 
இதன் காரணமாக வணிக வளாகத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும் பதறியடித்தபடி அங்கிருந்து வெளியேறினர். மேலும், இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
அவர்கள் வணிக வளாகத்தின் உள்ளே, தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு  சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக வணிக வளாகத்தில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
இருப்பினும் தீ விரைவாக அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காலையில் உடற்பயிற்சி கூடம், பல்பொருள் அங்காடிக்கு வந்த பலரும் தீ விபத்தின் காரணமாக திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்