தாராபுரம் அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாராபுரம் அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-26 18:22 GMT
தாராபுரம்:
தாராபுரம் அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு 
தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கவுதம் (வயது 19). இவர் அலங்கியம் அருகே பெரிச்சிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வந்தார். 
இந்த நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த வடமாநில பெண் ஒருவரை கவுதம் காதலித்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து கவுதம் தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவரது பெற்றோர், உனக்கு முன்னதாக திருமணம் ஆகாத அக்கா இருக்கும்போது உனக்கு திருமணம் எப்படி செய்வது?, அக்காவுக்கு திருமணம் செய்த பிறகு நீ திருமணம் செய்து கொள்ளலாம் என்றனர். மேலும் காதலித்த பெண் வடமாநில பெண் என்பதால் கவுதம் பெற்றோர் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை 
இதனால் மனமுடைந்த கவுதம் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. உடனே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். அங்கு வந்த ஆம்புலன்சில் கவுதமை ஏற்றி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுதம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்