பல்லடம் அருகே கார் டிரைவரை 3 மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பல்லடம் அருகே கார் டிரைவரை 3 மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-08-26 18:17 GMT
பல்லடம்
பல்லடம் அருகே கார் டிரைவரை 3 மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கார் டிரைவர் கடத்தல்
சிவகங்கையை சேர்ந்தவர் சக்தி (வயது30).இவர் திருப்பூ்ா திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் பாக்கியலட்சுமி (65) என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு மாற்று கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் பாக்கியலட்சுமி மற்றும் அவரது 10 வயது பேத்தியுடன் நேற்றுமாலை 4½ மணி அளவில் பல்லடம் வழியாக கோவைக்கு தேசியநெடுஞ்சாலையில் சக்தியுடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பல்லடத்தை அடுத்த பெரும்பாலி என்ற இடத்தில் 3 கார்களில் வந்த 3 பேர் சக்தி ஓட்டி சென்ற காரை மறித்து சக்தியை காரில் இருந்து இறங்குமாறு மிரட்டி தங்களது கார்களில் அவரை கடத்திச்சென்றனர்.
மர்ம ஆசாமிகள் யார்?
சக்தி ஓட்டி வந்த காரை விட்டு விட்டு சென்றுவிட்டனர்.இதனையடுத்து பாக்கியலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 
மேலும் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்தி கடத்தப்பட்ட இடத்தில் இ்ருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை சேகரித்து சக்தியை காரில் கடத்தி சென்ற மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பல்லடத்தில் காரை ஓட்டி வந்த டிரைவரை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்