ஓசூர் அருகே, கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

ஓசூர் அருகே கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-26 18:16 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் நேற்று காலை பாகலூர் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். 

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 11 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

போலீசாரின் விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த காஞ்சீபுரம் மாவட்டம் நெமிலி அருகே மேல்வனபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (24), அவருக்கு உதவியாக வந்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து 11 டன் ரேஷன் அரிசியை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான லாரி உரிமையாளர் சுந்தரராமன் (34) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்