6½ கிேலா கஞ்சா பறிமுதல் - வாலிபா் கைது

குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

Update: 2021-08-26 17:47 GMT
குத்தாலம்:
குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
கண்காணிப்பு பணியில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையை தடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார், குத்தாலம் மற்றும் ஆலங்குடி பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 
6½ கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது
அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (வயது  27) என்பவர் ஆலங்குடி பழவாறு பாலம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. 
இதனையடுத்து தனிப்படை போலீசார் பழவாறு பாலம் பகுதியை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த  6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து,  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டனையும் பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தனர். 
இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை ைகது செய்து, 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்