வேலூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வேலூர் சரகத்திற்கும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் காஞ்சீபுரம் சரகத்திற்கும், குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு விழுப்புரம் சரகத்திற்கும், திருவண்ணாமலை மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த ஜோதி விழுப்புரம் சரகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை வடக்கு மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் பிறப்பித்துள்ளார்.