தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-08-26 17:24 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கண்ணன் (வயது 23). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சை நகர கிழக்குப்போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், குண்டர் சட்டத்தில் கண்ணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்