ஆடுகள் திருடிய வாலிபர் கைது

எஸ்.புதூர் பகுதியில் ஆடுகள் திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-08-26 17:04 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் பகுதியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதன் வழியே மோட்டார் சைக்கிளில் 2 ஆட்டுக்குட்டியுடன் ஒரு வாலிபர் ெசன்றார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.
 விசாரணையில், திருச்சி மாவட்டம், வெள்ளியங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வராஜ் (வயது 24) என்றும், அவர் கொண்டு சென்ற 2 ஆட்டுக்குட்டிகளும் கடந்த 22-ந்தேதி வாராப்பூர் தெற்கு தெரு கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவரது வீட்டில் திருடப்பட்டது எனவும் தெரிய வந்தது. 2 ஆட்டுக்குட்டிகளை சந்தைக்கு அழைத்து சென்ற போது போலீஸ் வாகன சோதனையில் சிக்கினார். இதையடுத்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். 2 ஆட்டுக்குட்டிகளும் மீட்கப்பட்டன.


மேலும் செய்திகள்