திருவண்ணாமலையில் பலத்த மழை
திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது.
மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அந்த மழை நேற்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 அணைகள் உள்ளன. அதில் சாத்தனூர் அணைக்கு கடந்த சில நாட்களாக அவ்வபோது பெய்து வரும் மழையால் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
அணையில் வினாடிக்கு 289 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 53 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கலசபாக்கம்- 45, திருவண்ணாமலை- 32, கீழ்பென்னாத்தூர்- 25.8, செங்கம்- 10.6.