கூடலூரில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கூடலூரில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை;
கூடலூர்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). கட்டிட தொழிலாளி. ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் குடும்ப தகராறு காரணமாக கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.