ஊட்டியில் அரசு விதிமுறையை மீறிய 400 பேர் மீது வழக்குப்பதிவு
ஊட்டியில் அரசு விதிமுறையை மீறிய 400 பேர் மீது வழக்குப்பதிவு;
ஊட்டி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் செய்தனர்.
போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வியாபாரிகள் 400 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அரசு விதிமுறையை பின்பற்றாமலும் ஒரே இடத்தில் அதிகமாக கூட்டம் கூடினர். தொடர்ந்து பொதுசுகாதார சட்டத்தின் கீழ் 400 பேர் மீது ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.