வாகனம் மோதி கடமான் பலி

ஒட்டன்சத்திரம் அருகே வாகனம் மோதி கடமான் பலியானது.

Update: 2021-08-26 16:35 GMT
சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி வனப்பகுதியில், கடமான்கள் அதிக அளவில் உள்ளன. இந்தநிலையில் பாச்சலூர்-             ஒட்டன்சத்திரம் சாலையில், கோமாளிப்பட்டி என்னுமிடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கடமான் ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த விருப்பாட்சி கால்நடை டாக்டர் சரவணபவா தலைமையிலான குழுவினர், கடமானின் உடலை பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த மானின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி பலியான மான் 1½ வயது உடையது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்த விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்