சாயர்புரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சாவு

தொழிலாளி விஷம் குடித்து சாவு

Update: 2021-08-26 15:57 GMT
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள லுக்காபுரத்தை சேர்ந்த கணபதி மகன் பட்டுராஜ்(வயது 37). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று தோட்ட வேலைக்கு சென்ற இவர், திடீரென்று அங்கிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதுகுறித்து கணபதி அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்