உத்தமபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகரத்தலைவர் தெய்வம் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.