கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-08-26 15:01 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.27 -
ஸ்ரீவில்லிபுத்தூர்  ரெயில் நிலைய நுழைவாயில் பகுதியில் ரெயில்வே போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. அனைவரும் தடுப்பூசிபோட வேண்டும் என வலியுறுத்தி கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதில் கலந்துகொண்ட ெரயில் பயணிகளுக்கு முககவசம், கிருமி நாசினி, தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் முருகன், தனிப்பிரிவு அதிகாரி பொன் குமார் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்