உரிமம் பெறாமல் நாற்றுக்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நர்சரி உரிமம் பெற்ற நாற்றுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உரிமம் பெறாமல் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-08-26 14:28 GMT
விருதுநகர், ஆக.27-
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நர்சரி உரிமம் பெற்ற நாற்றுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உரிமம் பெறாமல் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

நாற்று விற்பனை 
 
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து நர்சரி உரிமையாளர்களும் உரிமம் பெற்றே நாற்றுகனை விற்பனை செய்ய வேண்டும் மேலும் நர்சரி உரிமையாளர்கள் காய்கறி நாற்று உற்பத்தி செய்யும்போது விதை விற்பனையாளரிடம் பயிர் ரகம், விதை குவியல் எண் மற்றும் காலாவதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு ரசீது வாங்கி இருப்பு பதிவேட்டில் ஏற்ற வேண்டும்.
 அவ்வாறு உரிய பதிவுகளை இருப்பு பதிவேட்டில் பதியாமலும் ரசீது வழங்காமலும் விற்பனை செய்யும் நர்சரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

நடவடிக்கை

நர்சரியின் முகப்பில் நர்சரியின் பெயர் பலகை, நாற்றுக்கள் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகை வைக்க வேண்டும். புதிய உரிமம், புதிய உரிமம் வேண்டி விண்ணப் பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் ரூ. 1000-க்கான செல்லான், ஆதார் அட்டை நகல், நர்சரி இருப்பிட வரைபடம், ஒப்பந்த நகல் அல்லது சிட்டா ஆகிய வற்றுடன் தொடர்பு கொண்டு புதிய உரிமம் பெறலாம். உரிமம் பெறாமல் நாற்றுக்கள் விற்பனை செய்யும் நர்சரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்