தேனி மாவட்டத்தில் 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் 8 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 610 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 3 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85 ஆயிரத்து 607 பேர் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 8 ஆயிரத்து 42 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.