கொரோனா தடுப்பூசி முகாம்
தளவாய்புரம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
தளவாய்புரம், ஆக.27-
தளவாய்புரம் அருகே முகவூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கொேரானா தடுப்பூசி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. இதனை பஞ்சா யத்து தலைவர் முனியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இங்கு முதல் நாள் 156 பேருக்கும், 2-வது நாள் 140 பேருக்கும், 3-வது நாள் 180 பேருக்கும் தடுப்பூசி போடப ்பட்டது. இதில் பஞ்சாயத்து துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அயன் கொல்லங்கொண்டான் பஞ்சாயத்து பகுதியில் 2 நாட்கள் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை பஞ்சாயத்து தலைவர் வெள்ளத்துரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதல் நாள் 120 பேருக்கும், 2-வது நாள் 150 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.