பேரம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர்கள் மோ.ரமேஷ், மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் காமராஜ், கோபால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் தினகரன், ஜெகதீசன், ராஜா, தயாளன், கண்ணதாசன், காஞ்சிப்பாடி சரவணன், ஜெகஜீவன்ராம், வழக்கறிஞர் பாலா, கிளை செயலாளர்கள் சேகர், வெங்கடேசன், சிலம்பு சம்பத், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.