நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் 132 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 132 அடியாக குறைந்தது.

Update: 2021-08-26 13:41 GMT

கூடலூர்:
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கடந்த 11-ந்தேதி அணையில் 136.35 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு தமிழகத்துக்கு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் நின்றுவிட்டது.
இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 132.60 அடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 362 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1,300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 5 ஆயிரத்து 305 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்