அம்மம்பள்ளி அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறப்பு; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது;-

Update: 2021-08-26 13:29 GMT
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 500 கன அடிநீர் நேற்று 25-ந்தேதி இரவு 9.30 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) காலை 3 மணி வரை திறக்கப்படவுள்ளது. திறக்கப்பட்ட நீரானது அதே நாள் மதியம் சொரக்காய்பேட்டை தடுப்பணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்