திருத்தணியில் ரூ.4 லட்சம் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

திருத்தணியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-26 12:26 GMT
போலீஸ் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று திருத்தணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருத்தணி பஸ் நிலையம் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த டோமினிக் (வயது 45) என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது திருத்தணி சுற்றுப்புற பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் கொடுத்த தகவலின்பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட டோமினிக் அலெக்ஸ் நேற்று முன்தினம் இரவு திருத்தணி நீதிமன்ற நீதிபதி வீட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்