செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 90 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 740 - ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 210 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2427 -ஆக உயர்ந்துள்ளது. 1103 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.