உத்திரமேரூர் அருகே குளத்து நீரில் நச்சுத்தன்மையா? சுகாதாரத்துறையினர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கட்டியாம்பந்தல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பொது குளம் உள்ளது. இந்த குளத்தது நீரில் நச்சுத்தன்மை உள்ளதாக கிராம மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்து இருந்தனர்.

Update: 2021-08-26 11:09 GMT
இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கட்டியாம்பந்தல் குளத்தை ஆய்வு செய்தனர். பின்னர் குளத்து நீரின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ஆய்வுக்கு பின்னரே குளத்து நீரில் நச்சுத்தன்மை உள்ளதா? என்பது தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்