நாடுகாணி சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு

நாடுகாணி சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு;

Update: 2021-08-26 08:59 GMT
கூடலூர்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. 

கூடலூர்-கேரள எல்லையில் நாடுகாணி தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்காவும் மூடப்பட்டது. பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. 

ஆனால் தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்கா மட்டும் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து 1½ ஆண்டுகளுக்குப் பிறகு நாடுகாணி தாவரவியல் சுற்றுச்சூழல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்