இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-25 21:45 GMT
நெல்லை:
இந்திய மாணவர் சங்கத்தினர் மாநில துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு முன்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ குழு பரிந்துரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில, விடுதிகள் திறப்பு குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். விடுதி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் திரும்ப வரவழைக்க திட்டம் வகுக்க வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அதிக கல்வி கட்டணம் வசூலித்த தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்