அறச்சலூர் அருகே போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
அறச்சலூர் அருகே போக்சோ சட்டத்தில் முதியவரை போலீசாா் கைது செய்தனா்.
அறச்சலூர்
அறச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 61). இவர் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை அங்குள்ள ஒரு தோட்ட பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து அறச்சலூர் போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.