விஷம் குடித்த தொழிலாளி சாவு

பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-25 20:51 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவியநகர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 47). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ெசல்வராஜ்க்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் சம்பவத்தன்று வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் நேற்று மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்