வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Update: 2021-08-25 20:51 GMT
பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன்(வயது 33). இவருக்கு திருமணமாகி கஞ்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரனுக்கும், மனைவி கஞ்சம்மாளுக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கஞ்சம்மாளின் சகோதரர் ராமன் என்பவர், சந்திரனை பார்த்து எனது சகோதரியை வைத்து உனக்கு வாழ தெரியவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமன், அரிவாளால் சந்திரனை வெட்டினார். இதில் படுகாயமடைந்த சந்திரன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார், ராமன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்