பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

Update: 2021-08-25 20:50 GMT
திருமங்கலம்
உசிலம்பட்டி அருகே உள்ள தாடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தாடையம்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாகைக்குளம் வழியாக செல்லம்பட்டி சென்றார். வாகைக்குளம் காலனி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பஸ் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த சிந்துபட்டி போலீசார் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்