அழகியை அழைத்து சென்றதால் அதிகாரிகள் விசாரணை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சேலம் மாநகர மோட்டார் வாகன பிரிவுக்கு அழகியை அழைத்து சென்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2021-08-25 20:48 GMT
சேலம்:
சேலம் மாநகர மோட்டார் வாகன பிரிவுக்கு அழகியை அழைத்து சென்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அழகியை அழைத்து சென்றார்
சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அழகியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் மோட்டார் வாகன பிரிவு உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர்.
விஷம் குடித்தார்
மேலும் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பிரிவில் பணியாற்றும் போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்