போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணை
நெல்லையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணையை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வழங்கினார்.;
நெல்லை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நெல்லை மாநகர பகுதிக்கு 16 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 16 பேரையும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அவர்கள் சிறப்புடன் பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்து கூறினார்.