ஒரு கிலோ கஞ்சாவுடன் 6 பேர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-08-25 19:47 GMT
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலணிக்குழி அம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் மேலணிக்குழி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்கண்ணு மகன் பாலாஜி (வயது 23), மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் கணேஷ் (21), ஏரி மேட்டு தெருவைச் சேர்ந்த ரவி மகன் தேவேந்திரன் (22), கொளஞ்சி மகன் சின்ஜான் என்கிற விஜய் (23) என்பது தெரிய வந்தது.
அப்போது பாலாஜி கையில் பிளாஸ்டிக் பை ஒன்று இருந்தது. அதை பையை வாங்கி பிரித்துப் பார்த்தபோது அதில் சுமார் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சக்திவேல் (24) மற்றும் ஜெயபால் மகன் பூனே என்கிற ஜெயப்பிரகாஷ்(31) ஆகிய இருவரும் வெளியூர்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பாலாஜியிடம் கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்