கஞ்சா விற்ற வாலிபர் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
கீழராஜகுலராமன் போலீசார் அம்மன்கோவில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 34) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கணேசனை கைது செய்தனர்.