கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்தார். தற்போது 181 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.