வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்பதாக புகார். குடியாத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
குடியாத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரவணன். இவர் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக பணம் கேட்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை ஆயுதப்படைக்கு மாற்றி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.