கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி மஞ்சள் வாழை பயிர்களுக்கு காப்பீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி மஞ்சள் வாழை மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

Update: 2021-08-25 17:25 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காப்பீட்டு கட்டணம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காய பயிர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரையிலும், மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை பயிர்களுக்கு அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந் தேதி வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். 
பயிர் காப்பீட்டுக் கட்டணம் வெங்காயம் ஏக்கருக்கு 802 ரூபாய் 76 பைசா, மரவள்ளி ஏக்கருக்கு ஆயிரத்து 385 ரூபாய் 68 பைசா, மஞ்சள் ஏக்கருக்கு ஆயிரத்து 956 ரூபாய் 24 பைசா, வாழை ஏக்கருக்கு ஆயிரத்து 842 ரூபாய் 62 பைசா ஆகும். அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையை செலுத்தி பதிவு செய்திட வேண்டும்.

சிட்டா, அடங்கல்

இப்பயிர் காப்பீடு பதிவு செய்ய நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர், விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 
இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி மரவள்ளி, மஞ்சள், வெங்காயம் மற்றும் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்